நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ!
இந்தியாவில் நீருக்கடியில் செல்லக்கூடிய முதல் மெட்ரோ ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6) கொல்கத்தாவில் தொடங்கி வைக்கிறார்.
நீங்கள் நலமா? திட்டம் அறிமுகம்!
அரசு செயல்படுத்தும் திட்டங்கள் முறையாக பயனாளிகளை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக நீங்கள் நலமா? என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சனாதனம் வழக்கில் தீர்ப்பு!
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ – வாரண்டோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
திரைப்பட விருதுகள் விழா!
2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ராஜரத்தினம் கலையரங்கில் இன்று நடைபெறுகிறது.
அறுபடை வீடு ஆன்மிக பயணம்!
அறுபடை வீடு ஆன்மீக பயணத்தின் இரண்டாம் கட்ட பயணம் பழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்து இன்று தொடங்குகிறது.
கலைஞர் அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு அனுமதி!
கலைஞர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட உள்ளது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கதேசம், இலங்கை மோதல்!
இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 655-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குஜராத், பெங்களூரு மோதல்!
பெண்கள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா
டிஜிட்டல் திண்ணை: சிறுத்தைக் கணக்கு… ஸ்டாலின் ஆலோசனை!