சீரியல் என்றாலே விஜய் டிவி தான். டிஆர்பியில் கெத்து காட்டும் விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.
அந்த வரிசையில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் ‘கிழக்கு வாசல்’ சீரியலும் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியலை நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தயாரித்து வழங்கியது.
தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக நடிகை ரேஷ்மா முரளிதரன், ஹீரோவாக வெங்கட் ரங்கநாதன் ஆகியோர் நடித்திருந்தனர்.
நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.
கதாநாயகி ரேஷ்மா திடீரென விலகியதால் தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது என்று அரசல் புரசலாக கூறப்படுகிறது. என்றாலும் உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை.
கிழக்கு வாசல்’ சீரியல் போல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலும் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘தெறி காம்போ’ பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஏ. ஆர். முருகதாஸ்
ரூ.4.2 கோடி மோசடி : ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!
Thalaivar 171: சூப்பர் ஸ்டாருக்கு ‘வில்லனாகும்’ முன்னணி நடிகர்… அப்போ மைக் மோகன் இல்லையா?