ஜனவரி 13 முதல் 16 வரை துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது.
இதனால் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி மற்றும் 6 மணி காட்சிகளுக்கு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வரும் ஜனவரி 13 முதல் 16 வரை வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என்று தமிழ்நாடு பேரிடர் மற்றும் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை இணை இயக்குனர் செந்தாமரை அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வரும் ஜனவரி 13 முதல் 16-ஆம் தேதி வரை விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.
திரையரங்குகள் முன்பாக நடிகர்களுக்கு ரசிகர்கள் கட் அவுட் மற்றும் பாலபிஷேகம் செய்யக்கூடாது. திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
தமிழக சட்டமன்றம்: அன்று ஏற்பட்ட சர்ச்சை!
பொங்கல் அழைப்பிதழ்: தமிழ்நாட்டை புறக்கணித்த ஆளுநர்!