விஜய்யின் பாலிடிக்ஸ் புடிச்சிருக்கு: பாராட்டிய சிவராஜ் குமார்

Published On:

| By Selvam

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு ஷிவமோகா தொகுதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதா போட்டியிடுகிறார். இந்தநிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாக நடிகர் சிவராஜ் குமார் இன்று (மே 3) தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “களம் ரொம்பவே பாசிட்டிவ்வாக இருக்கிறது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அது மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்றடைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.

நான் அரசியல்வாதி கிடையாது. நடிகர் மட்டுமே. என்னுடைய மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன்” என்றார்.

தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவராஜ்குமார், “நடிகர் விஜய்யின் கொள்கையும் நோக்கமும் எனக்கு பிடித்திருக்கிறது. அவரது பேச்சுக்களை கேட்டிருக்கிறேன். அதில் நேர்மை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி தான் எனது தந்தை: மதிஷா பதிரனா உருக்கம்!

ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் பிரார்த்தனை: மோடி விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share