பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் ”சூர்யா 42” தலைப்பு!

சினிமா

தமிழ் சினிமாவில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தின் பெயர் என்ன என்பதே விவாதமாக இருந்து வருகிறது.

ஆகஸ்ட் 21,2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூவி கிரியேஷன்ஸ் வம்சி பிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா.

சிறுத்தை சிவா இயக்கிவரும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த வரலாற்றுக்காலம், தற்காலம் இணைக்கப்பட்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்து மொழிகளில் தயாராகிறது என்று சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் பெயர் என்ன என்பதை ஏப்ரல் 16, 2023 அன்று காலை 9 மணி 5 நிமிடத்தில் அறிவிப்பதாக ஏப்ரல் 11 அன்று ஸ்டுடியோ கீரீன் தரப்பில் அறிவித்தனர்.

அப்போதிலிருந்து இந்தப்படத்தின் பெயரென்ன? என்கிற எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடம் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும், விவாதம் சூடு குறையாமல் நடந்துவருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பெயர் குறித்து உலவும் பல தகவல்களில் ஒன்று என்னவென்றால்? இப்படத்துக்கு கங்குவா (Gangvaa) என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பெயரை தேர்வு செய்யக் காரணம் என்ன என்ற போது 1984 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான படம் கங்குவா. ரஜினிகாந்த், சபனா ஆஸ்மி உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் மலையூர் மம்பட்டியான் படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பெயரைத்தான் இப்போது சூர்யா 42 படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

தென்னிந்திய மொழிகளை விட வட இந்தியாவில் இந்தப்படத்தைப் பெரிதாகப் பேச வைக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இந்தப் பெயரை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றனர்.

பாகுபலி, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் போன்று உலகம் முழுவதும் எளிதில் சென்றடையக்கூடிய பெயராக இருக்க வேண்டும் என்பதால்’ கங்குவா”என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக சூர்யா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராமானுஜம்

அமித் ஷாவை கிண்டல் செய்வதா? உதயநிதியைக் கண்டித்து பாஜக வெளிநடப்பு!

அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய்யின் அரசியல் முகூர்த்தம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *