கிச்சன் கீர்த்தனா: பனானா கேக்

Published On:

| By christopher

கோடை விடுமுறையில் வீட்டில் வலம்வரும் குழந்தைகளுக்கும், நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கும் சுவையான தின்பண்டம் செய்ய நினைப்பவர்கள் இந்த பனானா கேக் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?
ரோபஸ்டா வாழைப்பழம் – ஒன்று (200 கிராம்)
முட்டை – 2
சர்க்கரை, மைதா மாவு – தலா 150 கிராம்
பால் – 100 மில்லி
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
சோடா உப்பு – அரை டீஸ்பூன்
பாதாம் பருப்பு (வெந்நீரில் போட்டு எடுத்து, தோல் உரித்துப் பொடியாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்எப்படிச் செய்வது?
முட்டையை பவுலில் உடைத்து ஊற்றி, சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து எலெக்ட்ரானிக் எக் பீட்டரால் நன்கு அடிக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரையும் சோடா உப்பையும் கலந்துகொள்ளவும். ரோபஸ்டா வாழைப்பழத்தை முள்கரண்டி வைத்து மசித்து, அதனுடன் பால் சேர்த்துக் கலக்கவும். மைதா மாவு கலவையையும், வாழைப்பழம் – பால் கலவையையும் இரண்டு பாகங்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும்.
முதலில் சர்க்கரை – முட்டைக் கரைசலுடன் ஒரு பங்கு மைதா மாவுக் கலவை நன்றாகக் கலந்து, ஒரு பங்கு வாழைப்பழக் கலவையைச் சேர்க்கவும். இரண்டாவது பங்கு மைதா கலவையுடன், மீதமுள்ள வாழைப்பழக் கலவையைக் கலந்து, பாதாம் பருப்பு துண்டுகளைச் சேர்க்கவும். கேக் `பேக்’ செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, கேக் கலவைகளை ஊற்றி, 175 டிகிரி செல்ஷியஸில் ப்ரீ ஹீட் செய்த அவனில் 50-60 நிமிடங்கள் மிடில் `ராக்’கில் வைத்து `பேக்’ செய்து பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிஎஸ்கேவை சிதறடித்த பஞ்சாப்: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

பத்தவச்சிட்டியே பரட்ட: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share