சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் அர்ணவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை திவ்யாவுக்கும், அதே சீரியலில் நடித்த நடிகர் அர்ணவுக்கும் பழக்கம் ஏற்பட்டு 5 வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது திவ்யா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால், கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக திவ்யா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
ஆனால் ஏற்கனவே திருமணமாகி குழந்தையுள்ள திவ்யா, தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதுடன் தற்போது கர்ப்பத்தை கலைக்க நாடகமாடுவதாக அர்ணவ் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து சில பெண்களும் அர்ணவ் மீது புகார் தெரிவித்தனர். மலேசியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் புகார் தெரிவித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதுடன், பெண்கள் விஷயத்தில் அர்ணவ் மோசமானவர் என்றும் திவ்யா சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கும் என்றும் அவர் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.
திவ்யா அளித்த புகாரின் பேரில், போரூர் அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அர்ணவ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் வராததால் கடந்த 14-ம் தேதி நேமம் அருகே நடந்து கொண்டிருந்த செல்லம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அர்ணவ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து 15 நாள் காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நடிகர் அர்ணவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அர்ணவ் ஜாமீன் கேட்டு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனால் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் இல்லாத காரணத்தால் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது திவ்யா சீரியலில் நடிப்பதற்காக குழந்தையை கலைக்க திட்டமிட்டு நாடகம் நடத்துவதாக அர்ணவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திவ்யா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திவ்யா தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த ஆதாரங்களையும், அர்ணவ் மீது பெண்கள் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
இதையடுத்து அம்பத்தூர் நீதிமன்றம், நடிகர் அர்ணவ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் செல்லம்மா சீரியலில் இருந்து அர்ணவ் நீக்கப்பட்டுள்ளதாகவும் ,அர்ணவ் நடித்து வந்த சித்து ரோலில் தெலுங்கு சீரியலில் முன்னணி நடிகராக வலம் வரும் திலீப் ஆர் செட்டி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கலை.ரா
பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுப்பு: திடீர் போராட்டத்தில் ஜி.கே.வாசன்
“சோனியா காந்திக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்” : சசிதரூர்