டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By christopher

அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?

உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று (மே 2) வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி பிரச்சாரம்!

ஷிவமொகா மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமாருக்கு ஆதரவாக ராகுல்காந்தி இன்று பிரசாரம் செய்கிறார்.

வெளியே செல்லாதீர்கள்!

தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்லாதீர்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அபராதம்!

சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி அமலுக்கு வருகிறது.

சுனிதா கெஜ்ரிவால் இன்று ரோடு ஷோ!

குஜராத் மாநிலத்தில் பரூச் மற்றும் பவ்னாநகர் ஆகிய இடங்களில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியினரை ஆதரித்து சுனிதா கெஜ்ரிவால் இன்று ரோடு ஷோ நடத்துகிறார்.

சத்யஜித் ரே பிறந்தநாள்!

இந்திய சினிமாவின் உலகளாவிய அடையாளமாய் விளங்கும் தன்னிகரற்ற இயக்குநர் சத்யஜித் ரே பிறந்தநாள் இன்று.

வங்கதேசம் – இந்தியா மூன்றாவது டி20 போட்டி!

வங்கதேசம் மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டி சில்ஹெட்டில் இன்று நடைபெறவுள்ளது.

லாராவின் பிறந்த நாள் இன்று!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் பதிவு செய்த வீரர் பிரையன் லாராவின் பிறந்த நாள் இன்று.

ஐதராபாத் – ராஜஸ்தான் மோதல்!

ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

பெட்ரோல் டீசல் நிலவரம்!

சென்னையில் இன்று 48 வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கு, டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பனானா கேக்

சிஎஸ்கேவை சிதறடித்த பஞ்சாப்: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel