ஷாருக்கானுக்கு அறுசுவை விருந்து வைத்த விஜய்!

சினிமா

தளபதி விஜய் எனக்கு அறுசுவை விருந்து படைத்தார் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் விஜய் இடையேயான நட்புறவு எப்படி என்பது அனைவருக்கும் தெரியும்.

இருவரும் கடந்த 2013ம் ஆண்டு நடந்த பிரபல தொலைக்காட்சியின் விருது நிகழ்ச்சியில் ஒன்றாக நடனமாடியதை யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் மீண்டும் நடிகர் விஜய்யை நேரில் சென்று சந்தித்ததை ஷாருக்கானே கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை எண்ணூரில் படத்தின் சண்டைக் காட்சிகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதி, ஷாருக்கான் இடையிலான காட்சிகள் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டன.

அதனைதொடர்ந்து நடிகர் விஜய்யை அவருடைய வாரிசு பட சூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரில் சென்று ஷாருக்கான் மற்றும் அட்லி இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து நடிகர் ஷாருக்கான் ட்வீட் செய்துள்ளார். அதில், “தலைவர் (ரஜினிகாந்த்) எங்கள் செட்டிற்கு வந்து ஆசீர்வதித்தார்.

நயன்தாராவுடன் படம் பார்த்தது… அனிருத்துடன் பார்ட்டி செய்தது.. விஜய் சேதுபதியுடன் ஆழமான விவாதங்கள் மேற்கொண்டது.

தளபதி விஜய் எனக்கு அறுசுவை விருந்து படைத்தார். இயக்குனர் அட்லி மற்றும் பிரியா கொடுத்த விருந்தோம்பலுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் நான் இப்போது சிக்கன் 65 எப்படி செய்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஷாருக்கானின் ட்வீட்டை பார்த்த ரஜினி, விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் பலரும் இது குறித்து பரப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

கிச்சன் கீர்த்தனா : ஆப்பிள் திரட்டுப்பால்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *