அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’.
காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா சம்பத், ஸ்வாமிநாதன், சவுந்தர்யா, ஜெயா ஸ்வாமிநாதன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(14.10.2022) சென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், ”யாரையும் காயப்படுத்த சொல்லவில்லை. இன்று காலையில் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பார்த்தேன்.
அதில் நடிகை இந்துஜா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். ‘பில்லா பாண்டி’ படத்தில் நான் தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அவருக்கு அது தான் முதல் படம்.
அப்போது தொடர்ந்து 4 படங்கள் என்னுடைய ஸ்டூடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தமானார்.
இப்போது கூட ‘நானே வருவேன்’ படத்தில் நடித்திருக்கிறார். அந்த நேர்காணலில் இந்துஜாவிடம், ‘நீங்கள் நடித்ததிலேயே மோசமான படம் எது?’ என கேள்வி கேட்கிறார்கள்.
அதற்கு அவர், ”பில்லா பாண்டி” என கூறியிருக்கிறார். அது ஒரு நல்ல கதைக்களம் கொண்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படம். இந்துஜாவிற்கு அப்படி இருக்க வேண்டும் என அவசியமில்லை.
நாயகிகளை பற்றி பேசும்போது எனக்கு இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால், நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏறிய ஏணியை மறந்துவிடக்கூடாது.
சினிமா ராட்டினம் போல மேலேயும் போகும், அதேசமயம் கீழயும் வந்துவிடும்” என ஆர்.கே.சுரேஷ் பேசியுள்ளார்
இராமானுஜம்
70 ஆம் ஆண்டில் பராசக்தி: தயாராகிறது ஹெச்டி பிரிண்ட்!
சர்தார் : கார்த்தியை டார்ச்சர் செய்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்