மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.
சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தப்படத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் நடந்து வந்தன.இப்போது அந்த வெளியீட்டுத் தேதியில் மாற்றம் நடந்திருக்கிறது. அதற்குக் காரணம் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படம்தான் காரணம் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தப்படத்தை மே 19 ஆம் தேதியன்று வெளியிடத் திட்டமிட்டு இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வந்தன. ஆனால் மே 19 ஆம் தேதிக்குள் படம் தயாராகாது என்பதால் இயக்குநர் மாரிசெல்வராஜ் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மேலும் பல நாட்கள் தேவை என்று கேட்டிருக்கிறார்.
அதனால் அவருடைய வேண்டுகோளுக்கு ஏற்ப மாமன்னன்வெளியீட்டு தேதியை ஜூன் 29 ஆம் தேதி என்று மாற்றிவிட்டார்கள்.
இதனால் ஏற்கெனவே ஜூன் 29 என்று திட்டமிட்ட மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்ற வேண்டியசூழல் ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் மாமன்னன் படமும் அவர்களுடையது, மாவீரனும் அவர்களுடையது என்பதால் மாவீரனை ஒரு மாதம் தள்ளி வைத்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘மாவீரன்’ படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரைக்கு வரும் என்று . நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ பாடல் பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சகோதார, சகோதரிகளே வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி மாவீரன் திரையில் உங்களைச் சந்திக்க வருகிறான்” என்று தெரிவித்து மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இராமானுஜம்
“ஸ்டாலினுக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் நன்றி மாநாடு”: இனிகோ இருதயராஜ்
லக்னோ vs குஜராத்: வெற்றி யாருக்கு