இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷான நடிகை மிருணாள் தாகூர் தமிழில் எண்ட்ரி கொடுக்கத் தயாராகி இருக்கிறார்.
‘ஹலோ நான் தான்’ என்னும் மராத்தி படத்தின் வழியாக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய மிருணாள் தாகூர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தார்.
தெலுங்கில் வெளியான ‘சீதாராமம்’ படம் இவருக்கு தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை அளித்தது. தொடர்ந்து நானியுடன் இணைந்து நடித்த ‘ஹாய் நன்னா’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது தெலுங்கின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘பேமிலி ஸ்டார்’ என்னும் படத்தில் மிருணாள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக கோலிவுட்டிலும் கால் பதிக்க மிருணாள் தயாராகி விட்டார். சிவகார்த்திகேயன் ஜோடியாக அவரின் 23-வது படத்தில் நடிக்க மிருணாள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
முழுக்க, முழுக்க மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கி வருவதாகவும், படத்தின் ஷூட்டிங் காதலர் தினமான நாளை (பிப்ரவரி 14) முதல் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வாலும், முக்கிய வேடமொன்றில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் நடிக்க இருக்கின்றனராம்.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK 21’ படத்தின் 9௦% ஷூட்டிங் முடிவுக்கு வந்து விட்டது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 16 அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தலைவர் ரஜினியுடன் நேரடியாக மோதும் தளபதி விஜய்?
எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை : எடப்பாடி கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்