தோனி கொடுத்த கிஃப்ட்: முஸ்தபிசுர் ரஹ்மான் சொன்ன அந்த விஷயம்!

விளையாட்டு

நடப்பு ஐபிஎல் சீசன் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 10 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றியும், 5-ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5-ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த மே 1-ஆம் தேதி சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது தீபக் சஹார் காயம் காரணமாக வெளியேறினார். இது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே சென்னை அணியின் பந்துவீச்சாளர் மதீச பத்தினர காயம் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் சென்னை அணியிலிருந்து விலகுகிறார்.

வங்கதேச பிளேயரான முஸ்தபிசுர் வங்கதேசம் – ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியில் இருந்து விலகுகிறார்.

இந்தநிலையில்,  முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி அவரது எண் மற்றும் பெயர் பொறித்த சிஎஸ்கே டி ஷர்ட்டை பரிசளித்துள்ளார். அதில் தோனி கையெழுத்துடன் With Love to Fizz என்று எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து முஸ்தபிசுர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மஹி பாய் உங்களுக்கு நன்றி. உங்களைப் போன்ற ஜாம்பவானுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது சிறப்பான உணர்வாக இருந்தது. எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் உங்களுக்கு நன்றி.

நீங்கள் கற்றுக்கொடுத்த விளையாட்டு நுணக்கங்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்களுடன் மீண்டும் இணைந்து விளையாட ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அணியில் அடுத்தடுத்து பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாகவும், வெளிநாடுகளில் போட்டியில் விளையாடுவது காரணமாகவும் வெளியேறுவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்த பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை :உதகை ஆர்டிஓ அறிவிப்பு!

டெஸ்டில் சறுக்கிய இந்தியா… டி20, ஒரு நாள் போட்டிகளில் ஸ்டேட்டஸ் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0