சென்னை வந்த ஷாருக்: வழியனுப்பிய நயன்

Published On:

| By Jegadeesh

மும்பையில் இருந்து நேற்று (பிப்ரவரி 12) சென்னைக்கு வந்த நடிகர் ஷாருக்கான் நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான திரைப்படம், ‘பதான்’.

இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான், நேற்று(பிப்ரவரி 11 ) இரவு சென்னையில் உள்ள நடிகை நயன்தாராவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஷாருக்கான் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதையடுத்து காரில் ஏறி செல்லும் முன் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார் ஷாருக். அவரை வழியனுப்பி வைக்க நடிகை நயன்தாராவும் அங்கு வந்திருந்தார். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: வித்தியாசமான உணவு காம்பினேஷன்… உடலுக்கு நல்லதா?

அஜித் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திய விக்கி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share