நடிகர் அஜித்தின் ஏகே 62- படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்த வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகத்தில் இருந்த அவர், ”கடவுள் அருளால் கனவுகள் அனைத்தும் நனவாகும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே விக்னேஷ் சிவனின் கதை அஜித்துக்கும் படத்தை தயாரிப்பதாக இருந்த லைக்கா நிறுவனத்துக்கும் பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியானது.
இதனால் வருத்தத்தில் உள்ள விக்னேஷ் சிவன், தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் உடனான படம் குறித்து தான் பதிவிட்டிருந்த பதிவுகளை நீக்கினார், கவர் போட்டோவாக வைத்திருந்த அஜித்தின் படத்தையும் நீக்கினார். இதன்மூலம் அஜித் படத்தில் விக்னேஷ் சிவன் இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், ஏகே 62-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அஜித் மீதான அன்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தி உள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி நடிகர் அஜித் சிரித்தபடி இருக்கும் கேண்டிட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு, அதற்கு ஹார்டின் எமோஜியையும் பறக்க விட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
படத்தில் இருந்து நீக்கிய பின்பும் ஒரு ரசிகனாக அஜித் மீது அவர் அதீத அன்பு செலுத்தி உள்ளதைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தமிழ் என்பேனா! அது தமிழன் பேனா!
ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணங்களை அடுக்கிய முன்னாள் கேப்டன்!