இயக்குநர் ராம்கோபால் வர்மா ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளார்.
இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்தி மற்றும் தெலுங்கில் அண்டர்வேர்ல்ட் தாதாக்கள் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர்.
முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட் செலவில் படங்களை இயக்கும் வாய்ப்பு ராம்கோபால் வர்மாவுக்கு கிடைக்கவில்லை.
அதனால் கடந்த சில வருடங்களாக கவர்ச்சி படங்களை, வாழ்க்கை வரலாறு சம்பந்தமான படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாண் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக பவர்ஸ்டார் என்கிற பெயரில் படம் எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தி வியூகம் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார் ராம்கோபால் வர்மா.
இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடிக்கிறார். அவரது மனைவியாக நடிகை மானஸா ராதாகிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.
இராமானுஜம்
சொந்தமாக வீடும் இல்லை, காரும் இல்லை : ஷகீலா