லியோ படத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ள கிளிம்ஸ் வீடியோவை இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ளது படக்குழு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ படம் தயாராகி வருகிறது. சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், இயக்குநர் மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே ரசிகர்களுக்கு படக்குழு அவ்வப்போது அப்டேட்டுகளையும் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
#GlimpseOfHaroldDas #LEO 🔥 pic.twitter.com/tz1K9fykJP
— Seven Screen Studio (@7screenstudio) August 15, 2023
நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ஹரோல்ட் தாஸின் கிளிம்ஸ் வீடியோவை தான் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் அர்ஜுன், ஒரு கருப்பு நிற காரில் மாஸாக வந்து இறங்குகிறார்.
பின்னர் உள்ளே நடந்து செல்கிறார். அவர் உள்ளே நடந்து செல்லும் போது, ஏராளமானவர்கள் அங்கு அமைதியாக அர்ஜுன் வருவதை பார்த்துக் கொண்டு நின்றிருக்கின்றனர். இதனையடுத்து உள்ளே செல்லும் அர்ஜுன் கத்தியால் ஒருவரது கையை வெட்டுகிறார்.
இந்த காட்சிகளுக்குப் பிறகு, அர்ஜுன் ரத்தம் தெறிக்கப்பட்ட முகத்தோடு, சிகரெட் பிடித்துக் கொண்டே திரும்புகிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் போது கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது தான் நினைவிற்கு வருகிறது.
எனவே ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கும், ஹாரோல்ட் தாஸ் கதாபாத்திரத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வியை ரசிகர்களிடத்தில் எழுப்பியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
தற்போது இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருவதால் “HaroldDas” என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.
மோனிஷா
ஐசிசி உலகக் கோப்பை டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
”மோடி தேசிய கொடி ஏற்றுவார்…. ஆனால்”: மல்லிகார்ஜூனே கிண்டல்!