chandramukhi 2 vettaiyaan first look

வேட்டையனாக ராகவா லாரன்ஸ்: சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக்!

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிவாஜி புரடெக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே ரஜினிகாந்த் கொடுத்திருந்த வாக்குறுதிப்படி நடித்த படம் சந்திரமுகி.

குறுகியகால தயாரிப்பாக, பி. வாசு இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு வெளியானது சந்திரமுகி.

கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் நடிகர் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு – ரஜினிகாந்த் இடையேயான காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

அந்த அளவுக்கு ஒரு மாஸ்டர் பீஸ் படமாக சந்திரமுகி இருந்து வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

சந்திரமுகி 2-ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்துள்ளார். அதேபோல் ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளது.

சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இவர், அதன்பின் இசையமைக்கும் முதல் படம் சந்திரமுகி 2 தான்.

சமீபத்தில் இப்படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகளின் போது படத்தை பார்த்து மிகவும் பயந்துபோனதாகவும், படம் சூப்பராக இருப்பதாகவும் தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி இருந்தார் கீரவாணி.

சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. வேட்டையன் ராஜா தோற்றத்தில் கம்பீர நடைபோட்டு வரும் ராகவா லாரன்ஸின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இராமானுஜம்

வசூலிலும் கல்லா கட்டும் டிடி ரிட்ட்ர்னஸ்: முதல் வார ரிப்போர்ட்!

என்.எல்.சி விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *