சொந்தமாக வீடும் இல்லை, காரும் இல்லை : ஷகீலா

சினிமா

தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக நடிக்க தொடங்கியவர் நடிகை ஷகீலா.

மலையாள முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை பாதிக்ககூடிய வகையில் 1990களில் இவர் நடித்த  படங்கள் கேரளாவில் வசூலை குவித்தன. இதனால் மோகன்லால், மம்முட்டி படங்கள் கூட பாதிக்கப்பட்டது

இதையடுத்து ஷகீலாவை வைத்து மலையாளத்தில் படங்களை தயாரிக்க வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியதுடன் மலையாள படங்களில் ஷகீலா நடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் ஷகீலா தமிழ்நாட்டிற்கு வந்து செட்டில் ஆனார். ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்த ஷகீலா, அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சி ஷகீலாவின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. தனியார் யூடியூப் தளங்களில் பேட்டி கொடுத்ததுடன், தனக்கு நெருக்கமான நண்பர்களின் வலைதளங்களுக்கு தொகுப்பாளராகவும் பணியாற்ற தொடங்கினார். 

இந்நிலையில், விக்கிபீடியாவில் சொந்த வீடு, கார் வசதியுடன் ஷகிலா இருப்பதாக குறிப்பிட்டு இருப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஷகீலாவிடம் கேட்ட போது, தான் இவ்ளோ நாட்களாக வாடகைவீட்டில் தான் வசித்து வருகிறேன் என்றவர் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்

விக்கிபீடியாவில் கூறப்பட்டு உள்ளதுபோல் எனக்கு சொந்தமாக வீடு, பி.எம்.டபிள்யூ கார் எதுவும் இல்லை. நான் 40 வருஷமா வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். மலையாள சினிமாவில் 1990களில்நான் ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பாதித்த காலமெல்லாம் இருந்தது.

நான் நடிப்பின் மூலம் நிறைய சம்பாதித்திருந்தாலும், அவற்றையெல்லாம் என் சகோதரி எடுத்து சென்றுவிட்டார். வீட்டில் பணத்தை வச்சிருந்தா வருமான வரி சோதனையில் சிக்கிவிடக் கூடும் எனக்கூறி தான் பத்திரமாக வைத்திருக்கிறேன் என வாங்கியவர், என்னை ஏமாற்றிவிட்டார்.

அதனால் நான் மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து என் வாழ்க்கையை தொடங்கினேன். தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருவதாகவும் ஷகீலா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: திமுகவுடன் தொடர்பு… அதிமுக மாசெக்கள் மாற்றத்துக்குத் தயாராகும் எடப்பாடி

சிறுமி விஷ்ணுபிரியா தற்கொலை: முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *