ஜேசன் சஞ்சயின் அறிமுக படத்திற்கு ஹீரோவை ‘லாக்’ செய்து விட்டதாக, உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் ஜேசன் சஞ்சய் கதை சொல்லி இருந்தார். நடுவில் துருவ் விக்ரமிற்கும் கதை சொல்லி இருந்தார். இதில் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் இருவரும் கால்ஷீட் இல்லை என கைவிரித்து விட்டனர்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனும் கால்ஷீட் காரணமாக நடிக்க முடியவில்லை என தெரிவித்திருக்கிறார். துருவ் விக்ரமின் நிலைப்பாடு என்னவென உறுதியாக தெரியாமல் இருந்தது.
இதற்கிடையில் கவினிற்கும் சஞ்சய் கதை சொன்னதாக தெரிகிறது. கால்ஷீட் பிரச்சினையால் அவராலும் நடிக்க முடியவில்லையாம். சஞ்சயின் படம் தள்ளிப்போனதில் விஜய் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.
தற்போது சஞ்சயின் ஹீரோ தேடல் முடிவிற்கு வந்துள்ளது. துருவ் விக்ரமையே படத்தின் ஹீரோவாக சஞ்சய் ஒப்பந்தம் செய்து விட்டாராம். அதோடு துருவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கரும் படத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இப்படம் வாரிசுகளின் படமாக மாறியுள்ளது.
துருவ் தற்போது மாரி செல்வராஜின் புதிய படத்தில் கபடி வீரராக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. இதில் துருவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்த படத்திற்கு நடுவில் சஞ்சய் படத்திலும் துருவ் நடிக்கலாம் என தெரிகிறது.
ஜேசன் சஞ்சய் – துருவ் விக்ரம் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஏப்ரல் தொடக்கத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெளிநாட்டில் தங்கச் சுரங்கம்…விதவிதமாய் துப்பாக்கி… டுபாக்கூர் கமாண்டோவை ’தூக்கிய’ போலீஸ்!
மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!