வாழ்க்கையில் ஜெயிக்க நடிகர் சந்தீப் கூறும் ரகசியம்!

சினிமா

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சந்தீப் கிசான்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்நிலையில், இவரது நடிப்பில் உருவான மைக்கேல் திரைப்படம் பிப்ரவரி 3ஆம்தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதனிடையே, ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய சந்தீப் கிசான் “ வேலைக்கான மரியாதை , அதற்கான உழைப்பு, பயம் இந்த மூன்று விஷயங்களை பின்பற்றுங்கள் வெற்றி பெறலாம்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ” நான் முதலில் நடிகன், அப்புறம் தான் பாடி பில்டர். யாரோட பயணத்தையும் நாம் தொடர முடியாது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பயணம் இருக்கும், அதைதான் நாம் செய்ய வேண்டும் ” என கூறினார்.

திரைப்படத்தின் வெற்றி பற்றி கூறுகையில், எந்தப் படத்தையும் ஏனோதானோன்னு எடுக்க முடியாது. நாம் முழு உழைப்பையும் போட்டாத்தான் ஒரு படம் ஜெயிக்கும்.

வெற்றி பெற முக்கியமான விஷயம், ஒரு படத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, அதற்கு கொடுக்க வேண்டிய உழைப்பு, அதை எடுக்கும் போது இருக்கவேண்டிய ஒரு பயம் இந்த மூன்றும் ரொம்ப முக்கியமானது, சினிமாவில் வேலை பண்றவங்களுக்கு இது ரொம்ப முக்கியம் .

இது என் வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட விஷயம் . இந்த விஷயத்தை நான் லோகேஷ் கனகராஜ் கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.

சமீபத்துல கோயம்புத்தூருக்கு போயிருந்தப்ப லோகேஷ் கனகராஜ்ஜுக்கு கிடைத்த வரவேற்பை பார்க்கிறப்ப ரொம்ப ஆச்சரியமா இருந்தது என்று கூறினார்.

திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிங்கிளா இருப்பது ஒரு அதிர்ஷ்டம். கல்யாணம் பண்ணிக்கிறது அழகான ஒரு விஷயம் ஆனால், சரியான நபரோட இருந்தாத்தான் அழகா இருக்கும். இப்ப சிங்கிளா இருக்கோமே அப்படின்னு பீல்பண்ணி யாருடையாவது ரிலேஷன்ஷிப் வெச்சுக்கிட்டீங்கன்னா பிரச்சினைதான் என கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காந்தாரா 2 கதை என்ன? எப்போது ரிலீஸ்?

விமர்சனம்: சந்தீப்பை ‘ஸ்டார்’ ஆக்குமா மைக்கேல்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *