கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியான எந்தவொரு படமும் திரையரங்குகளில் கல்லா பொங்கி வழிகிற மாதிரி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் பிறமொழிகளில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் சமச்சீரான வெற்றிகளைக் குவித்து வருகிறது.
தமிழ் திரையுலகை எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டில் தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ இருபடங்களையும் திரையரங்குகள் பெரிதும் எதிர்பார்த்து திரையிட்டனர்.
இரண்டு படங்களும் திரையரங்க வசூலில் ஹிட் அடிக்கவில்லை. உலக அளவில் ‘அயலான்’ 100 கோடி ரூபாய், ‘கேப்டன் மில்லர்’ 75 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. இரண்டு படங்களின் தயாரிப்பு செலவுடன் மொத்த வசூலை ஒப்பிட்டால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்து வந்த ரஜினிகாந்த் கெளர வேடத்தில் நடித்த ‘லால் சலாம்’ படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் தடுமாறியதுடன் தயாரிப்பாளருக்கு 50 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ப்ளூ ஸ்டார்’ நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி என்ற இலக்கை நெருங்கவில்லை.
மணிகண்டனின் ‘லவ்வர்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் பெரிதாக சோபிக்கவில்லை. மற்ற படங்கள் எதுவும் கோலிவுட்டில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சொல்லப்போனால், காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 9-ம் தேதி தமிழில் வெளியானது ‘லவ்வர்’. அதே நாளில் மலையாளத்தில் வெளியானது ‘ப்ரேமலு’. ஆனால் ‘ப்ரேமலு’ படத்தின் வசூல் ரூ.75 கோடி.
இந்த பாக்ஸ் ஆஃபீஸ் ஒப்பீடு படங்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது என்பதைத் தாண்டி அவை சொல்ல வருவது ஒன்று தான். அது தமிழ் சினிமாவில் கதை வறட்சி உள்ளது என்பது தான். தற்போது உச்ச நடிகர்களாக இருந்தாலும் கதை இல்லாவிட்டால் திரையரங்கில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை சமீபத்திய ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ உறுதிசெய்துள்ளது.
தமிழ் சினிமாவில் படம் வெளியான அன்றே, அல்லது மூன்று நாட்களில் வெற்றி கொண்டாட்டங்களை தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், இயக்குநர்களும் கேக் வெட்டி கொண்டாடுவது, பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி கொண்டாடுவது பரவலாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் ஜனவரியில் வெளியான ‘தூக்கு துரை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ப்ளு ஸ்டார்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதாக கேக் வெட்டி கொண்டாடியவர்கள் அந்தப் படத்தின் தயாரிப்பு செலவு, பாக்ஸ் ஆபீஸ் வருமானம், இதர உரிமைகள் வருமானத்தை அறிவித்து இந்தப் படத்தின் மூலம் எங்களுக்கு இவ்வளவு லாபம் என அறிவிப்பதுதான் நேர்மையான செயலாக இருக்கும்.
பத்திரிகையாளர்கள் வசூல், வியாபாரம் பற்றி கேட்டால் சார் ஐ.டி. பிராப்ளம் வரும் என நாசூக்காக தவிர்க்கின்றனர். அப்புறம் எப்படி வெற்றி என கொண்டாடுகிறார்கள் என்பதற்கான விடை கிடைக்கவில்லை. ‘தூக்கு துரை’, ‘சிங்கப்பூர் சலூன்’ இருபடங்களும் தயாரிப்பாளர்களுக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது திரையரங்க வட்டார தகவல்.
2024 ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் வெளியான நேரடி தமிழ் திரைப்படங்கள்.
1.05.01.2024- அரணம்
2.05.01.2024- கும்பாரி
3.12.01.2024-மேரி கிறிஸ்துமஸ்
4.12.01.2024- அயலான் ayalaan siren box office report
5.12.01.2024- கேப்டன் மில்லர்
6.12.01.2024- மிஷன் சேப்டர் – 1
7.25.01.2024- சிங்கப்பூர் சலூன்
8.25.01.2024- தூக்குத்துரை
9.25.01.2024- முடக்கறுத்தான்
10.25.01.2024- புளு ஸ்டார்
11.26.01.2024-லோக்கல் சரக்கு
12.26.01.2024- த.நா
13.02.02.2024- வடக்குப்பட்டி ராமசாமி
14.02.02.2024- டெவில்
15.02.02.2024-மறக்குமா நெஞ்சம்
16.02.02.2024-சிக்லெட்டுகள்
17.09.02.2024- லால் சலாம்
18.09.02.2024- லவ்வர்ஸ்
19.09.02.2024- இமெயில்
20.16.02.2024- கழுமரம்
21.16.02.2024- எப்போதும் ராஜா
22.16.02.2024- சைரன் ayalaan siren box office report
23.16.02.2024- ஆந்தை
24.16.02.2624 – எட்டும் வரை எட்டும்
25. 23.02.2024- வித்தைக்காரன்
26. 23.02.2024- ரணம் அறம் தவறேல்
27.23.02.2024-பைரி
28.23.02.2024- நினைவெல்லாம் நீயடா
29. 23.02.2024- பாம்பாட்டம்
30. 23.02.2024-கிளாஸ்மேட்
31. 23.02.2024-பர்த்மார்க்
32.23.02.2024-ஆபரேஷன் லைலா.
-ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவிடம் பன்னீர் வைத்த நான்கு கோரிக்கைகள்!
Gold Rate: ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த தங்கம் விலை!