பாஜகவிடம் பன்னீர் வைத்த நான்கு கோரிக்கைகள்!
இன்னும் சில தினங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
அதிமுக தொடர்ந்து பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல, பாஜகவும் பாமக, தேமுதிக கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் தான், நேற்று இரவு 10.40-க்கு மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் இரண்டாவது மாடியில் உள்ள 301-வது அறையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங், எல்,முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் 11.40 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பாஜக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து கூட்டணியை உறுதி செய்தார்.
இந்த சந்திப்பின் போது பாஜக தலைவர்களிடம் பேசிய ஓபிஎஸ்,”டிடிவி தினகரன் அதிருப்தியில் இருக்கிறார். அவரை சந்தித்து சமசரம் செய்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குங்கள்.
நான் ஏற்கனவே அவரிடம் பேசிவிட்டேன். சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவை கோருங்கள்.
நான்கு தொகுதி எங்களுக்கு ஒதுக்க வேண்டும். தாமரை சின்னத்தில் நிற்க நிர்பந்தம் செய்ய வேண்டாம். தனிச்சின்னத்தில் எந்த சின்னம் கிடைத்தாலும் அதில் போட்டியிடுகிறோம்.
காரணம், அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. இந்த நேரத்தில் தாமரை சின்னத்தில் நின்றால், அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சி பலனளிக்காமல் போய்விடும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து எல்.முருகன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவின. Does L Murugan meets Anbumani
இதுதொடர்பாக பாஜக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு செக்யூரிட்டி அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களை தவிர்த்துவிட்டு தனது பிரைவேட் காரில் சென்ற எல்.முருகன், ஒரு மணி நேரத்திற்கு பின் திரும்பினார்.
இந்த சமயத்தில் அன்புமணியை எல்.முருகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொண்டார்.
ஆனால், அன்புமணியை எல்.முருகன் நேற்று சந்திக்கவில்லை. சென்னையில் இன்று அன்புமணியையும், தைலாபுரத்தில் டாக்டர் ராமதாசையும் மத்திய அமைச்சர்கள் விகே சிங், கிஷன் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
அதேபோல, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரிடமும் பாஜக மத்திய அமைச்சர்கள் இன்று கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
WPL 2024: கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!
வேலைவாய்ப்பு: ரயில்வே துறையில் பணி!
Does L Murugan meets Anbumani