ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல பாடலின் ’ரீமிக்ஸ்’!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தில் ’பாடாத பாட்டெல்லாம்’ என்ற பாடலின் ரீமிக்ஸ் முதல் சிங்கிளாக வரும் 11ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களில் வெற்றிகரமாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். அவரது இயக்கத்தில் வந்த முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தன.

இதனையடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்களை தயாரித்த S.கதிரேசன் தனது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ருத்ரன் திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சரத் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்,

இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பை இன்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் 11ம் தேதி ருத்ரன் திரைப்படத்தில் முதல் பாடலாக ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் வெளியாகவுள்ளது.

1962ம் ஆண்டு வெளியான ‘வீர திருமகன்’ என்ற படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம் பெற்ற பாடல் ‘பாடாத பாட்டெல்லாம்’.

பலரையும் கவர்ந்த இந்த பாட்டு தான் தற்போது ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆடலுடன் பாடலை கேட்டேன்’ குத்துப்பாட்டாக பலரையும் ஆட்டம் போட வைத்தது.

அந்த வரிசையில் தற்போது ’பாடாத பாட்டெல்லாம்’ பாடலும் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பார்டர் கவாஸ்கர் டிராபி : ரோகித் சர்மா அரைசதம்… திணறும் ஆஸ்திரேலியா

100 பில்லியன் டாலரை இழந்த கூகுள்: செய்த தவறு என்ன?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts