சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 11) ரூபாய் 49,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 2௦ பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 79-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 79,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களிலேயே தங்கத்தின் விலை ரூபாய் 49,000-த்தை கடந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 2௦ பைசா விலை குறைந்துள்ளது. தங்கத்தை பொறுத்தவரை நேற்று (மார்ச் 1௦) விற்பனையான அதே விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை கூடவோ, குறையவோ இல்லை. திங்கட்கிழமையான இன்று விலையில் பெரிதாக மாற்றமில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கூடுமா? இல்லை குறையுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
WPL 2024: கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!