கவினின் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் படத்தின் இயக்குநர் இளன் சமீபத்திய பேட்டியில், அப்படம் குறித்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இளன் ஸ்டார் குறித்து, ” நான் இந்த கதையை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதி விட்டேன். படம் குறித்து கவினிடம் சொன்னபோது என்னுடைய வாழ்க்கையிலும் இந்த சம்பவங்கள் நடந்தது என்றார்.
எனக்கு அது மேஜிக் ஆக இருந்தது. முதலில் இதை குறும்படமாகத் தான் எழுதினேன். பின்னர் ஸ்டார் ஆக மாறியது. 1980 – 2015 வரை ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதையாகும்.
மும்பை வரை சென்று படப்பிடிப்பினை நடத்தி இருக்கிறோம். இதில் இடம்பெறும் விண்டேஜ் லவ் பாடலின் விஎப்எக்ஸ் நிச்சயம் உங்களைக் கவரும். முதல் 1௦ நிமிடங்களிலேயே படத்தின் கதை உங்களுக்குத் தெரிந்து விடும்.
மே மாதம் 3-வது வாரத்தில் ஸ்டார் படத்தை ரிலீஸ் செய்திட திட்டமிட்டுள்ளோம்”, என்று தெரிவித்து இருக்கிறார்.
இளன் சொன்ன விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, ஸ்டார் படம் ஹீரோவாக ஆசைப்படும் இளைஞன் ஒருவன் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும் என்று தெரிகிறது.
இளனின் அறிமுக படமான பியார் பிரேமா காதல் இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து ஹிட்டடித்தது. அதேபோல இந்த படமும் இளம் ரசிகர்களைக் குறிவைத்தே எடுக்கப்பட்டு இருப்பதால் படத்திற்கு 2கே கிட்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தின் பள்ளிகளில் போதைப்பொருள் விற்பனை: மோடி குற்றச்சாட்டு!
தூத்துக்குடி: வெற்றிக் கனி பறிக்கும் கனிமொழி… வெகுதூரத்தில் எதிர்க்கட்சிகள்!
அஜித் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்