“தாமி” படத்தில் தமிழ் நடிகை!

சினிமா

தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் இங்கிருந்து அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது

அந்த வகையில் ‘தாமி’ என்கிற படத்தில் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி மாணவி  சுவிதா ராஜேந்திரன் அறிமுகமாகிறார்.

நான்கு பையன்கள், நான்கு பெண்கள் என ஒரு ஜாலியான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுவிதா ராஜேந்திரன்.

சினிமாவில் நடிக்க தொடங்கியது பற்றி அவரிடம் கேட்ட போது “சிறு வயதிலிருந்து எனக்கு கமல் சாரை ரொம்பவே பிடிக்கும். அதனால் எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இத்தனைக்கும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் இல்லை. படிப்பை முடித்த பின்பு நடிக்க செல்கிறேன் என்றபோது ஆரம்பத்தில் எனது பெற்றோர்கள் தயங்கினார்கள்.. எதிர்ப்புகூட தெரிவித்தனர்.

அதன் பிறகு சென்னைக்கு வந்து மாடலிங் துறையில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். அதேபோல கூத்துப்பட்டறை கலைஞர் ஒருவரிடம் நடிப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. “உங்களிடம் ஒரு ஃபயர் இருக்கிறது.. நன்றாக பண்ணுகிறீர்கள்” என இயக்குநர் பிரவீன் உற்சாகப்படுத்தினார்.

ஒரு பக்கம் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தாலும் படங்களில் நடிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். தற்போது பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ரசிகர்கள் மனதில் நிற்கும்படியான நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதற்காக காத்திருப்பதிலும் தவறு இல்லை” என்று கூறுகிறார் சுவிதா ராஜேந்திரன்.

ராமானுஜம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பனீர் ஸ்டஃப்டு பராத்தா

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *