நடிகர் மாரிமுத்து காலமானார்!

சினிமா

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் இன்று (செப்டம்பர் 8) காலமானார்.

தமிழ் சினிமாவில் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்ததன் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் மூலம் சமீபத்தில் ஏராளமான நேர்காணல்களிலும் இடம் பெற்றிருந்தார் மாரிமுத்து.

இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது காலை 8.30 மணியளவில் மாரிமுத்துவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சூரியா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரிமுத்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மாரிமுத்துவின் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மோனிஷா

தமிழ்க்குடிமகன் : விமர்சனம்!

இலவசப் பேருந்து பயணச்சீட்டை இணையதளம் மூலம் பெறுவது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

1 thought on “நடிகர் மாரிமுத்து காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *