ஜெயம் ரவியின் “கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக “லவ் டுடே” படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமானார். லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி 2K கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோவாகவே அவர் மாறிவிட்டார்.
லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC – Love Insurance Corporation படத்தில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். LIC படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நயன்தாராவும் சீமானும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும், பிரதீப் ரங்கநாதனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அந்த புதிய படத்தை இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்திற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட இந்த ப்ராஜெக்ட் உறுதியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
LIC படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் ஒரு படம் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம். இந்த படத்தை முடித்த பிறகு தான் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் தமிழில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் “குட் பேட் அக்லி” படம் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூங்கு மூஞ்சி க்யூட்டி… ஜிவி இசையில் “டியர்” படத்தின் புது பாடல் ரிலீஸ்!
இஸ்ரேல் – ஹமாஸ்: போர் நிறுத்தத்துக்கு எகிப்தின் புதிய திட்டம்!
பியூட்டி டிப்ஸ்: இறுக்கமான பகுதிகளில் அரிப்பு… தீர்வு என்ன?
ஹெல்த் டிப்ஸ்: மண்பானைத் தண்ணீர் பருகுவதால் என்னென்ன நன்மைகள்?