கமல் ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவிக்கு பதிலாக நடிக்கப்போகும் நட்சத்திரங்கள் யாரென்பது குறித்து தெரிய வந்துள்ளது.
கமலின் 234-வது படமாக தக் லைஃப் உருவாகி வருகிறது. இதில் கமலுடன் இணைந்து திரிஷா, கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். கால்ஷீட் பிரச்சினை காரணமாக சமீபத்தில் இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார்.
தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகி இருக்கிறார். இதனால் அவர்கள் இருவரின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி துல்கர் சல்மான் வேடத்தில் நடிகர் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் அரவிந்த் சாமியும் நடிக்கவிருக்கின்றனர். இதற்கு முன் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கலாம் என கூறப்பட்டது.
வெப்பம் குளிர் மழை: விமர்சனம்!
ஆனால் தற்போது அரவிந்த் சாமி இப்படத்தில் இணைந்துள்ளார். முன்னதாக சிம்பு-அரவிந்த் சாமி இருவரும் செக்க சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் சிம்பு, அரவிந்த் சாமி படத்தில் இணைந்தது குறித்த முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் கமல் பிஸியாக இருக்கிறார் என்பதால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்ததும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இடைப்பட்ட இந்த தாமதத்தினை ஈடுகட்டும் வகையில் விரைந்து ஷூட்டிங் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்களின் உரிமை பறிபோகும்”: கலாநிதி வீராசாமி
அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி அறிவித்த சீனா!
”அரசியல் கட்சிகள் மீது கெடுபிடி கூடாது” : ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!