ராமராஜனின் ‘சாமானியன்’ டீசர் எப்படி?

சினிமா

தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில் ராமராஜன் நாயகனாக நடித்து வெளியான படங்களின் வெற்றியை பார்த்து அன்றைய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்தி போன்றவர்கள் அதிர்ந்தது உண்டு.

கரகாட்டகாரன் வெற்றிக்கு பின் நகரம் முதல் கிராமங்கள் வரை ராமராஜன் மக்கள் நாயகனாக வரவேற்கப்பட்டார்.

அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வணிக ரீதியாக மினிமம் கேரண்டி படங்களாக அமைந்தன.

அந்த வெற்றியை தக்கவைத்து கொள்ளவில்லை ராமராஜன்.  2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார்.

இப்போது அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

படத்தை இயக்கும் ராஹேஷ் கூறியதாவது, இந்தக் கதைக்கு ராமராஜன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நாயகனாக நடிக்க வைத்திருக்கிறோம்.

அவருடன் ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த 3 பேரும் சமூகத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதுதான் படம். ஒவ்வொரு சாமானியனுக்கும் தேவையான கதை இது. ராமராஜனுக்கு ஜோடி கிடையாது” என்றார்.

ராமராஜன் நடிக்கும் ‘சாமானியன்‘ படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி?

எம்.எஸ்.பாஸ்கர், ராதா ரவியின் வித்தியாசமான கெட்டப்புடன் டீசர் தொடங்குகிறது. அவர்களுக்கான அறிமுக காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

2 நிமிடத்துக்குள்ளான டீசரில், புரட்சியாளர் சேகுவேரா, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரின் புத்தகங்கள் மூலம் அரசியல் குறியீடுகளும் காட்டப்படுகின்றன.

படத்தின் டீசர் ஜாலியாக தொடங்கினாலும், அரசியல் குறியீடுகளுடன், அழுத்தமான மெசேஜை படம் உள்ளடக்கியுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

தேநீர் குவளையுடன் வரும் ராமராஜனின் அறிமுக காட்சி மிரட்டுகிறது. ஆனால், அந்தத் தோற்றத்துக்குரிய கம்பீரமான குரலாக ராமராஜன் குரல் இல்லை என்பது பலவீனமாக இருக்கிறது.

இராமானுஜம்

திருச்சிற்றம்பலம் ஓடிடி ரிலீஸ் எப்போது?

எடப்பாடியின் திடீர் டெல்லி பயணம்: பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *