இந்தியாவின் எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மீது உரிமை கோரி வரும் சீனா, தற்போது அம்மாநிலத்தின் 30 இடங்களுக்கு மறுப்பெயரிட்டு அறிவித்துள்ளது.
இந்தியாவின் எல்லையில் உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தங்கள் நாட்டின் பகுதி என உரிமை கோரி வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தை மையப்படுத்தி அவ்வப்போது பல கருத்துகளை வெளியிட்டு, இந்தியாவுடன் சீண்டலில் ஈடுபடுவதை சீனா வாடிக்கையாக கொண்டுள்ளது.
அதன்படி, தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு சீனா மறுபெயர் சூட்டி இன்று (ஏப்ரல் 1) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக பிரிவுகளை நிறுவுவதற்கும், பெயரிடுவதற்கும் பொறுப்பான சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தின் மறு பெயரிடப்பட்ட பகுதிகள் என குறிப்பிட்டு நான்காவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியை ஹாங்காங் பகுதியின் ஒரு நாளிதழ் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை, சீனா “ஜாங்னான்” என பெயரிட்டுள்ளனர்.
சீனாவின் சார்பாக தற்போது மறுபெயர் சூட்டப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலை கணவாய் ஆகியவை அடங்கும்.
சீனாவால் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் சீன எழுத்துக்கள், திபெத்திய, பின்யின், மாண்டரின் மற்றும் சீனாவின் ரோமானிய எழுத்துகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு, இதற்கு முன்பு சீனா 3 முறை மறு பெயர் வைத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
2017ஆம் ஆண்டு வெளியிட்ட முதல் பட்டியலில் 6 இடங்களுக்கும், 2021ஆம் ஆண்டு வெளியிட்ட 2வது பட்டியலில் 15 இடங்களுக்கும், 2023ஆம் ஆண்டு வெளியிட்ட 3வது பட்டியலில் 11 இடங்களுக்கும் மறுபெயரிட்டு வெளியிட்டிருந்தது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதை இந்தியா பலமுறை நிராகரித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், புதிய பெயர்களை வைப்பது, நிஜத்தை மாற்றாது என்றும் இந்தியா ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ஆனால், சீனா தற்போது வெளியிட்டுள்ள 4வது பட்டியலில் அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு மறுபெயரிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவைத் தேர்தல் சமயத்தில் மத்திய பாஜக அரசு, கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு எதிராக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் சீன அரசின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்கு எதிராக பாஜக அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rain Update: ‘ஜில்லென ஒரு மழைத்துளி’… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!
எம்.பில் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை!