இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சித்தார்த்.
இவர் இயக்குநர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய போது, சித்தார்த்தின் திறமையை கண்ட மணிரத்னம் ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் சித்தார்த்துக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
திரைத்துறையில் மட்டுமின்றி பொதுநலனுடன் தொடர்ந்து பல சமூக கருத்துகளையும் சித்தார்த் தெரிவித்து வருகிறார்.
மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அதிதி ராவும் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் இருவருமே இதை மறுத்து எந்த கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்தனர். அதனை தொடர்ந்து, இருவரும் சில பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது, இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் இருந்தது. மேலும் இவர்கள் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இன்று (மார்ச் 27) தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
அதிமுக கூட்டணிக்கு போகாதது ஏன்?: அன்புமணி விளக்கம்!