தற்போது ‘X’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ட்விட்டர் தளத்திற்கு போட்டியாக, மெட்டா நிறுவனத்தின் சார்பில் ‘திரெட்ஸ்’ என்ற சமூக வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம், இந்த ‘திரெட்ஸ்’ தளத்தில் கணக்கை தொடங்கிக்கொள்ளும் வகையில் மெட்டா நிறுவனம் இந்த தளத்தை அறிமுகம் செய்திருந்தது.
இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ள பின் பற்றுபவர்களை, அப்படியே ‘திரெட்ஸ்’ தளத்தில் பெற இந்த வசதி மிகவும் உபயோககரமாக இருந்ததால், பலரும் தங்களது இன்ஸ்டா கணக்கு மூலம், ‘திரெட்ஸ்’ தளத்தில் கணக்குகளை துவங்கினர்.
ஆனால், இவ்வாறு கணக்கு துவங்கியவர் ஒருவேளை தங்கள் திரெட்ஸ் கணக்கை அழிக்க வேண்டும் என்றால், இன்ஸ்டா கணக்கையும் சேர்த்து அழிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மெட்டா நிறுவனத்தின் இந்த நடைமுறை, பயனர்கள் பலரின் மத்தியிலும் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில், அந்த சமூக வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்ட 4 மாதங்களுக்கு பிறகு, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, இன்ஸ்டாகிராம் தளத்தின் தலைவரான ஆடம் மொசேரி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது திரெட்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஆடம் மொசேரி, “இனி பயனர்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அழிக்காமலேயே திரெட்ஸ் கணக்கை டெலீட் செய்து கொள்ளலாம்”, என குறிப்பிட்டு அதற்கான வழிமுறையையும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ஒரு பயனர் ‘Settings → Account → Delete or Deactivate Profile’ என்ற வழிமுறையை பின்பற்றி, அவரது ‘திரெட்ஸ்’ கணக்கை டெலீட் செய்துகொள்ளலாம்.
மேலும், பயனர்கள் திரெட்ஸ் பதிவுகளை முகநூல் மற்றும் இன்ஸ்டா பக்கத்திலேயே பார்த்துக்கொள்ளும் வகையிலான வசதி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சிலர் இந்த வசதியை விரும்பாததால், அவர்கள் இந்த வசதியை ‘Settings → Privacy’-க்குள் சென்று அணைத்து வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம்: நீதிமன்றம் உத்தரவு!
கனமழையால் விடுமுறை அறிவிப்பு… கல்லூரி தேர்வுகள் நடைபெறுமா?