ஜப்பான் டோக்கியோ ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர் பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோரது நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்தது.
இப்படம் ரூ. 1100 கோடிக்கும் மேலாக வசூல் வேட்டை செய்தது. பின்னர் மே மாதம் 20 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் நாளை (அக்டோபர் 21) ஜப்பானில் அந்நாட்டு மொழியில் வெளியாகவுள்ளது. ஆகையால் புரமோஷன் வேலைகளுக்காக இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நேற்று ஜப்பான் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர், ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஒரு வெல்கம் கார்ட் கொடுத்து அவரை வரவேற்றுள்ளார்.
அதனைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர், “இதில் நிறையப் பெயர்கள் இருக்கின்றன” என்று மகிழ்ச்சியோடு கூறினார். அந்த வெல்கம் கார்டில் ஜூனியர் என்.டி.ஆர் புகைப்படத்தோடு “தங்களை டோக்கியோ ரிட்ஸ் கார்ல்டன்-க்கு வரவேற்கிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் மேலும் சிலர் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு வரவேற்பு தெரிவித்து அவர்களது பெயரையும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
இதனைக் கண்ட ஜூனியர் என்.டி.ஆர் மிகவும் மகிழ்ச்சியாகத் தூய்மைப் பணியாளருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்கள் பரிசு அளித்திருப்பது வைரலாகி வருகிறது.
மோனிஷா
கார்கே: அக்டோபர் 26 பதவியேற்பு!
நடிகை தற்கொலை: முன்னாள் காதலர் கைது!