’ஓ… இவரு தான் அந்த ரோடு ராஜாவா?’ : வீடியோ வெளியிட்ட சென்னை போலீஸ்!

Published On:

| By christopher

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளின் நடுவில் உள்ள கம்பங்களில்  ‘நீங்க ரோடு ராஜாவா.?’ என்ற அச்சிடப்பட்ட குட்டி பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இதனை போலீசார் ஏன் வைத்துள்ளனர்? எதற்கு வைத்துள்ளனர்? என்று விடை தெரியாமல் சென்னைவாசிகள் அவற்றை கடந்து சென்றனர்.

ஏதோ சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுக்காக தான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்திருந்தாலும்,  சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் ஆச்சரியம் அளித்தது மட்டுமின்றி ஆங்காங்கே சரிந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை இன்று ‘நீங்க ரோடு ராஜாவா.?’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான விடையை தெரிவித்துள்ளது.

அதாவது யாரெல்லாம் சாலை விதிகளை மீறுகிறார்களோ அவர்கள் தான் ரோடு ராஜாவாம். இதுகுறித்து நடிகர்கள் யோகிபாபு, ஷாந்தனு, பகவதி பெருமாள், விஜே அர்ச்சனா, அப்துல் ஆகியோரை கொண்டு விழிப்புணர்வு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் போக்குவரத்துத் துறை சார்பில் அவர் தயாரித்த நீங்க ரோடு ராஜாவா? என்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், சாலை விதிகளை மீறுகிறவர்களை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அதனை #RoadRaja என்ற ஹேஷ்டேக்கில் @ChennaiTraffic ஐடியை டேக் செய்து சமூகவலைதளங்களில் வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அதனை ஆய்வு செய்து விதிமீறலை பதிவிடுவோருக்கு சன்மானமும், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுகவில் இணைந்தது ஏன்? : நடிகை கவுதமி விளக்கம்!

”போர்க்களத்தைவிடக் கொடூர சூழல்” : விவசாயிகள் போராட்டம் குறித்து ஸ்டாலின் வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share