வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையை ஏற்படுத்தியது.
இதனால் 3 நாட்கள் தொடர்ந்து பெய்து வந்த மழை இன்று ஓய்ந்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே நிவாரணப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அழைத்தும் மாநில அரசின் பிரதிநிதிகள் வரவில்லை : ஆளுநர் ரவி
IPL Auction: சொந்த அணி கேப்டனின் ’பெரும்’ சாதனையை சில நிமிடங்களில் பவுலர்!