IPL Auction: சொந்த அணி கேப்டனின் ’பெரும்’ சாதனையை சில நிமிடங்களில் வீழ்த்திய பவுலர்!

Published On:

| By christopher

mitchell starc demolished pat cummins achievement

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பவுலர் மிட்செல் ஸ்டார்க்கை ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் தொகைக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் துபாயில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா வீரர்களை எடுக்க அணிகள் இடையே பெரும் போட்டி நிலவுகிறது.

அதன்படி ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸை சென்னை, பெங்களூர் அணியுடன் போட்டி போட்டு ரூ.20.50 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி.

பெருமையை இழந்த பட் கம்மின்ஸ் 

ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகைக்கு  ஒரு வீரர் ஏலம் போனது இதுவே முதல்முறை. ஆனால் இந்த சாதனையை அடுத்த சில நிமிடங்களில் முறியடித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய வீரராக இருந்தவர் மிட்செல் ஸ்டார்க். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் தொடரில் 16 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த நிலையில் நடந்து வரும் மினி ஏலத்தில் 8 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்க உள்ளார்.

அதன்படி மினி ஏலத்தில் ரூ. 2 கோடி அடிப்படை விலையில் ஸ்டார்க்கின் ஏலம் தொடங்கியது.  முதலில் அவரை எடுக்க மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையே போட்டி நிலவியது. ரூ.9.8 கோடி வரை விலை ஏறிய நிலையில் இரு அணிகளும் விலகின.

அதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இணைந்தன. இரு அணிகளும் மாறி மாறி விலை கேட்க, கடைசியில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.24.75 கோடிக்கு மிட்செல் ஸ்டார்க்கை வாங்கியது கேகேஆர்.

ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க் 

மிட்செல் ஸ்டார்க் 33 வயதை எட்டியுள்ள போதும், பந்தை அதிக வேகத்தில் ஸ்விங் செய்யும் ஸ்டார்க்கின் திறன் எந்த பேட்ஸ்மேனுக்கும் அச்சத்தை கொடுக்கும். தற்போது அந்த திறமைதான் ஸ்டார்க்கை அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாற்றியுள்ளது.

கடைசியாக 2015ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அதில் 13 ஆட்டங்களில் விளையாடி 20 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அதன்பின்னர் காயம் காரணமாக தொடர்ந்து 8 ஆண்டுகளாக விளையாடாத நிலையில், தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக நடப்பு தொடரில் கொல்கத்தா அணிக்காக களமிறங்க உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அன்று விலை போகாத வீரர்… இன்று ரூ.14 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே! : யார் அவர்?

ஃபைட்கிளப் வசூல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

வாழ்த்து சொன்னது ஒரு குத்தமா?… பிரபல வீரரை பிளாக் செய்த ஹைதராபாத் டீம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel