மக்களவை தேர்தல் : தமிழகத்தில் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Published On:

| By indhu

இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் தமிழகத்தில் பகல் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) 102 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். அதன்படி, பகல் 3மணி நிலவரப்படி அதிகபட்சமாக தருமபுரியில் 57.86%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47% வாக்குப்பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் பதிவான வாக்குகளின் நிலவரம் பின்வருமாறு,

  1. தர்மபுரி – 57.86%
  2. நாமக்கல் – 57.67%
  3. கள்ளக்குறிச்சி – 57.34%
  4. ஆரணி – 56.73%
  5. கரூர் – 56.65%
  6. பெரம்பலூர் – 56.34%
  7. சேலம் – 55.53%
  8. சிதம்பரம் – 55.23%
  9. விழுப்புரம் – 54.43%
  10. ஈரோடு – 54.13%
  11. அரக்கோணம் – 53.83%
  12. திருவண்ணாமலை – 53.72%
  13. விருதுநகர் – 53.45%
  14. திண்டுக்கல் – 53.43%
  15. கிருஷ்ணகிரி – 53.37%
  16. வேலூர் – 53.17%
  17. பொள்ளாச்சி – 53.14%
  18. நாகப்பட்டினம் – 52.72%
  19. தேனி – 52.52%
  20. நீலகிரி – 52.49%
  21. கடலூர் – 52.13%%
  22. சிவகங்கை – 51.79%
  23. தென்காசி – 51.45%
  24. ராமநாதபுரம் – 51.16%
  25. கன்னியாகுமரி – 51.12%
  26. திருப்பூர் – 51.07%
  27. திருச்சிராப்பள்ளி – 50.71%
  28. தூத்துக்குடி – 50.41%
  29. கோயம்புத்தூர் – 50.33%
  30. காஞ்சிபுரம் – 49.94%
  31. திருவள்ளூர் – 49.82%
  32. திருநெல்வேலி – 48.58%
  33. மதுரை – 47.38%
  34. ஸ்ரீபெரும்புதூர் – 45.96%
  35. சென்னை வடக்கு – 44.84%
  36. சென்னை தெற்கு – 42.10%
  37. சென்னை சென்ட்ரல் – 41.47%

மேலும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் 3 மணி நிலவரப்படி, 45.243 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘பெயரையே காணோம்’ : வாக்களிக்க முடியாததால் நடிகர் சூரி வேதனை!

”ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” : விஜய் வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share