Fulfill your democratic duty - Vijay

”ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” : விஜய் வேண்டுகோள்!

அரசியல்

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 19) தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என அனைவரும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தமிழாக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு விஜய் அளிக்கும் முதல் வாக்கு இதுவாகும்.

தனது வாக்கினை செலுத்திய விஜய் தனது எக்ஸ் தளத்தில் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், “நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.

இந்து 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக நிர்வாகியை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்… வாக்குச்சாவடியில் பதற்றம்!

Lok Sabha Election 2024: வெள்ளை நிற ஆடையில் வந்த பிரபலங்கள்… என்ன காரணம்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *