கிச்சன் கீர்த்தனா: கோதுமை ரவை கட்லெட்

தமிழகம்

சர்க்கரை நோய் மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்தது. ஆனால், ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது நல்லது. நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் அதற்கு மாற்றாக இந்த  கோதுமை ரவை கட்லெட் செய்து சுவைக்கலாம்.

என்ன தேவை?

வறுத்த கோதுமை ரவை – ஒரு கப்
சோயா மாவு – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2
கீரை – ஒரு சிறிய கட்டு
சுரைக்காய் (சிறியது) – ஒன்று
கேரட் –  ஒன்று
பெரிய வெங்காயம் –  ஒன்று  
இஞ்சி – ஒன்று
பூண்டு – 5 முதல் 6
பச்சை மிளகாய் – 3
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். கீரையை நன்கு அலசிக் கழுவி, பொடியாக நறுக்கவும். சுரைக்காயையும் கேரட்டையும் துருவவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். சுரைக்காய் துருவலை நன்றாக பிழிந்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

பாதி சோயா மாவு, பாதி கோதுமை ரவை.. இரண்டையும் கலந்துகொள்ளவும். மீதி சோயா மாவை உப்பு சேர்த்து பேஸ்ட்டாகக் கரைத்துக்கொள்ளவும். மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, கைகளால் நன்றாக மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும்.

அதிலிருந்து சிறிது எடுத்து, கட்லெட் வடிவத்தில் செய்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, மெல்லிய துணியால் மூடவும். அடுப்பில் எண்ணெயை காயவைக்கவும். ஒவ்வொரு கட்லெட்டையும் சோயா கரைசலில் தோய்த்து எடுத்து, மீதி இருக்கும் ரவையில் புரட்டி, காயும் எண்ணெயில் போட்டு, குறைவான தீயில் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சட்னியுடனோ, சாஸுடனோ சூடாக பரிமாறவும்.

கோதுமை பொரி – ஓட்ஸ் பேல்

கிச்சன் கீர்த்தனா: கீரை கோதுமை போண்டா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *