மின்னம்பலம் மெகா சர்வே: விளவங்கோடு… வெற்றி கோட்டைத் தொடுவது யார்?

Published On:

| By christopher

தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவை தேர்தலுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று இத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பாஜக சார்பில் விஎஸ் நந்தினி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி போட்டியிடுகிறார்.

நான்கு முனை போட்டி நிலவும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் வாக்குகள் யாருக்கு? களத்தின் நிலவரம் என்ன?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… 

காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 45% வாக்குகளைப் பெற்று விளவங்கோடு தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

பாஜக வேட்பாளர் நந்தினி 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

அதிமுக வேட்பாளர் ராணி 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெமினி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் சுயேச்சைக்கும், 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆக…, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த முறை தாரகை கத்பர்ட் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

விளவங்கோடு வெற்றிக் கோட்டைத் தொடுவது யார்? | Vilavancode | MinnambalamMegaSurvey2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?

மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன?

மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை?

மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்?

மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி?

மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share