அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியிடுபர்களின் பெயர் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே 20ஆம் தேதி நடைபெறுகிறது. இங்குள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுபவர்களின் பெயரை காங்கிரஸ் இன்னும் வெளியிடவில்லை.
நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
அதேசமயம் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளான இந்த இரு தொகுதியிலும் அவர்களது குடும்பத்தில் இருந்துதான் போட்டியிட வேண்டும் என்ற விருப்பமும் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இன்று இரவுக்குள் நிச்சயமாக ஏதாவதொரு அறிவிப்பு வெளியாகும்.
ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் எங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள். காங்கிரஸ் தொண்டர்கள் அமேதியில் ராகுலும், ரேபரேலியில் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால் போட்டியிடுவதா வேண்டாமா என்பது அவர்களுடைய விருப்பம்” என்று ஏ.என்.ஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
#WATCH | Uttar Pradesh | Posters carrying pictures of Congress leader Rahul Gandhi and Samajwadi Party chief Akhilesh Yadav brought to Gauriganj-Amethi Congress office pic.twitter.com/oiEm2Xtc1z
— ANI (@ANI) May 2, 2024
“இந்தசூழலில் கௌரிகஞ்ச்-அமேதி காங்கிரஸ் அலுவலகத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பேனர்கள் எடுத்துவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமேதியில் ராகுல் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூறியிருக்கிறது” என்கிறார்கள் உபி காங்கிரஸ் வட்டாரத்தில்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திருவிழா தகராறு… தீவட்டிப்பட்டியில் நடந்தது என்ன? எஸ்.பி விளக்கம்!