நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்…

40 தொகுதி மெகா சர்வே முடிவு அரசியல்

சூடு பிடிக்கிறது அரசியல் களம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது.

மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர்.

இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக நாளை (ஏப்ரல் 14) முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது.

மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.

சர்வே முடிவுகளைத் தெரிந்துகொள்ள minnambalam.com இணையத்திலும், மின்னம்பலம் யூடியூப் சேனலிலும் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  1. மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?
  2. மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?
  3. மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்?
  4. மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி?
  5. மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு?
  6. மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்?
  7. மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்?
  8. மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்?
  9. மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்?
  10. மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு?
  11. மின்னம்பலம் மெகா சர்வே : மத்திய சென்னை… மகுடம் சூடப் போவது யார்?
  12. மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி?
  13. மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது?
  14. மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?
  15. மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?
  16. மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?
  17. மின்னம்பலம் மெகா சர்வே: கரூரை கைப்பற்றப் போவது யார்?
  18. மின்னம்பலம் மெகா சர்வே: கிருஷ்ணகிரி… சிகரம் ஏறுவது யார்?
  19. மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்?
  20. மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு?
  21. மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்?
  22. மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?
  23. மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்?
  24. மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி?
  25. மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?
  26. மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்?
  27. மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்?
  28. மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்?
  29. மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு?
  30. மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?
  31. மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை?
  32. மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன?
  33. மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?
  34. மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?
  35. மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?
  36. மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?
  37. மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்?
  38. மின்னம்பலம் மெகா சர்வே: கோயம்புத்தூர்… கொங்குத் தங்கம் யாருங்ணா?
  39. மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்?
  40. மின்னம்பலம் மெகா சர்வே: புதுச்சேரி… புது எம்.பி யார்?
  41. மின்னம்பலம் மெகா சர்வே: விளவங்கோடு… வெற்றி கோட்டைத் தொடுவது யார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOAT: பர்ஸ்ட் சிங்கிள் பாடகர் இவர்தானாம்… அட Youtube-ஏ அதிர போகுது..!

பிரணவ் – நிவின் பாலியின் வருஷங்களுக்கு சேஷம் – திரை விமர்சனம்!

 

+1
0
+1
1
+1
1
+1
11
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *