governor allegation tamilnadu government

அழைத்தும் மாநில அரசின் பிரதிநிதிகள் வரவில்லை : ஆளுநர் ரவி

அரசியல்

governor allegation tamilnadu government

மழைவெள்ள பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் மாநில அரசின் பிரதிநிதிகள் வரவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசுத்துறைகள் மற்றும் பாதுகாப்புப்படைகள் மேற்கொண்டு வரும் மீட்பு நிவாரண பணிகளை சென்னை, ராஜ் பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிசம்பர் 19) ஆய்வு செய்தார்.

இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்தியச் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை.

மழை பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது. மத்திய அரசுத்துறைகள், அவற்றின் வளங்களை மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன.

மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின் படியும் தேவைக்கேற்ப இயன்ற வகையில் சொந்தமாகவும் அவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுகின்றன.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால்,

எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாகக் கவலை தெரிவித்தன.

தற்போதுள்ள மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூடுதல் வளங்களைக் கையிருப்பில் வைத்திருக்குமாறு அவர்களை ஆளுநர் கேட்டுக் கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று டெல்லியில் முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ஆலோசனை நடத்துவது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, “கொரோனா போன்ற பேரிடரின்போது பிரதமர்தான் ஆலோசனைகளை, ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். அப்போது குடியரசுத் தலைவர் ஏதாவது செய்திருந்தால் என்ன ரியாக்‌ஷன்? அதே ரியாக்‌ஷன் தான் இப்போது” என்று முதல்வர் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

ஃபைட்கிளப் வசூல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

governor allegation tamilnadu government

+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *