சபரிமலையில் மகரவிளக்கு ஜோதி தரிசனம்!

Published On:

| By Selvam

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜனவரி 15) மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது.

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27-ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.

இந்தநிலையில், மகரவிளக்கு பூஜையின் முக்கிய நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு திருவாபரண பவனி சரங்குத்தி வந்தடைந்தது. பின்னர் கொடிமரத்தின் கீழே திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மாலை 6.20 மணிக்கு திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் மூன்று முறை அருள் பாலித்தார்.

ஜோதி தரிசனத்தை சபரிமலை, பாஞ்சாலி மேடு, புல்லுறுமேறு, சரங்குத்தி, மரக்கூட்டம், பண்டிதாளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கண்டு ஐயப்ப பக்தர்கள் தரிசித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரம்மிக்க வைக்கும் ரித்திக் ரோஷனின் Fighter டிரைலர்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு யாருக்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share