கோயில்களின் ஆகமங்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவில் சத்தியவேல் முருகனாரை அறநிலையத் துறை நியமித்ததற்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கான பணி நியமனம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு அறநிலையத் துறை புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது. அதில் 18 – 35 உடையவர்கள் மட்டும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் உள்ளிட்ட விதிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த புதிய விதியை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கின் முடிவில் அறநிலையத் துறையின் புதிய விதிகள் செல்லும் என்று உத்தரவிட்டதுடன், எந்தெந்த கோயில்களில் ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த குழுவில் மேலும் 2 பேரைத் தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சத்தியவேல் முருகனாரை கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை நியமித்தது.
இதை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தது.
அதில், ”ஓய்வு பெற்ற நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சத்தியவேல் முருகனார் நியமனம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியுடன் ஆலோசிக்கப்படவில்லை.
சத்தியவேல் முருகானாருக்கு ஆகமத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் தவறான தகவலைப் பரப்பி வருகிறார். அவரை இந்த குழுவிலிருந்து நீக்கி அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (பிப்ரவரி 15) பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனார் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் நவம்பர் 4ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சத்தியவேல் முருகனார் கோயில்களின் ஆகமங்களைக் கண்டறியும் குழுவில் அவரை அறநிலையத் துறை நியமித்துள்ளது. அவர் ஆகமத்தைப் பற்றி தவறான தகவலைப் பரப்பி வருகிறார் என்று வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சத்தியவேல் முருகனாரை நியமித்த அறநிலையத் துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் அறநிலையத் துறை பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.
பிரியா
பி.டெக் முதலாமாண்டு மாணவர் தற்கொலை: ஐஐடியில் சாதிப் பாகுபாடா?
‘வாத்தி’க்கு புது சிக்கல்: முதல்வருக்கு சென்ற கோரிக்கை!
பின்ன என்னங்க? அவரு சனாதனம் பற்றியும், மூட நம்பிக்கைகள் பற்றியும் பேசுறப்ப நாங்க தடை வாங்காம வேறென்ன செய்யறது?