பற்றி எரிந்த அரசு பேருந்து : பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

தமிழகம்

தமிழக அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தீ பற்றி எரிந்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் செல்ல அரசு பேருந்து ஒன்று நேற்று (நவம்பர் 13) இரவு தயாராக இருந்தது.

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாராக இருந்த வேளையில் இரவு 9.15 மணியளவில் பேருந்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

cuddalore government bus fire accident

இதனால் பேருந்திலிருந்த பயணிகளை ஓட்டுநர் செல்வம், நடத்துநர் முரளி இருவரும் அவசர அவசரமாகக் கீழே இறக்கிவிட்டனர்.

இந்நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து பற்றி எரியத் தொடங்கியது. பேருந்தின் டீசல் டேங்கிற்கு தீ பரவி நான்கு புறமும் முழுமையாகத் தீப்பற்றியது.
இதைப் பார்த்த அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஓட்டுநர்கள், தங்களது பேருந்துகளை வேறு இடத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்று நிறுத்தினர்.
அதேபோன்று கீழே நின்று கொண்டிருந்த பயணிகள், அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

cuddalore government bus fire accident

இதனையடுத்து தகவலறிந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், எந்த ஒரு பயணிக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

டயர் வெடித்ததால் தீ பற்றியதா அல்லது பேருந்தில் இருக்கும் வயர்களில் உராய்வு ஏற்பட்டு மின்கசிவு காரணமாக தீ பற்றியதா என சிதம்பரம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரியா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் வீரர்கள் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0