GOLD RATE: தாறுமாறாக உயரும் தங்கம்… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Manjula

gold silver rate march-7th-2024

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 7) ஒரு சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்து ரூபாய் 48,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 50 அதிகரித்து ரூ.6,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூபாய் 440 அதிகரித்து ரூ.53,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 78.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 78,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நாலைந்து தினங்களிலேயே தங்கத்தின் விலை ஒரேயடியாக உயர்ந்து ரூபாய் 49,000-த்தை நெருங்கியுள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 5௦ பைசா விலை அதிகரித்துள்ளது.

இந்த விலை எற்றத்தினை வைத்துப் பார்க்கும்போது வெள்ளிப்பொருட்களை வாங்குபவர்கள் யோசிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் நகைக்கடை பக்கம் செல்வதை தவிர்ப்பது நல்லது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் கதைக்கு ஓகே சொன்ன தனுஷ்?

பியூட்டி டிப்ஸ்: வியர்வையை விரட்ட ஈஸி வழி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel