ஹிந்தியில் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்களான வார், பதான் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். தற்போது இவரது இயக்கத்தில் ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஃபைட்டர்.
இந்த படத்தில் ரித்திக் ரோஷனுடன் தீபிகா படுகோனே, அனில் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வியோகாம் ஸ்டுடியோஸ் மற்றும் மார்ஃபிலிக்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. ஃபைட்டர் படத்தில் நடிகர் ரித்திக் ரோஷன், Fighter Pilot கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் Patty.
சமீபத்தில் ஃபைட்டர் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று (ஜனவரி 15) ஃபைட்டர் படத்தின் டிரைலரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
டிரைலரில் இடம்பெற்றுள்ள Fighter Jet சண்டை காட்சிகள் மிரட்டலாக உள்ளது. VFX காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்களால் பல இந்திய இராணுவ வீரர்கள் இறக்கின்றனர். தீவிரவாதிகளை எதிர்த்து Fighter Jet Pilot- ஆக இருக்கும் ரித்திக் ரோஷனும் அவரது குழுவும் போராடுகின்றனர். இறுதியில் ரித்திக் ரோஷனும் அவரது குழுவும் தீவிரவாதிகளை தடுத்தார்களா? இல்லையா? என்பதே இந்த படத்தின் கதை.
ஃபைட்டர் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதே, படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் டைகர் vs பதான் படத்திற்கு பின் ஃபைட்டர் 2 படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
வரும் ஜனவரி 25 ஆம் தேதி ஃபைட்டர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…